free website hit counter

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இரு அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அசலங்கா 39 ரன்னும், குசால் மெண்டிஸ் 36 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட், ஜேய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் 24 ரன்னும், டேவிட் வார்னர் 21 ரன்னும் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் மேத்யூ வேட் பொறுப்புடன் ஆடி 26 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மேத்யூ வேட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: