free website hit counter

தமிழ்நாடு வளரும் போது இந்தியா வளர்கிறது - பிரதமர்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
சென்னை,

சென்னை பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கு நெடுஞ்சாலை, ரெயில்வே தொடர்பான பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,

வணக்கம் தமிழ்நாடு என உரையை தொடங்கினார்.

தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தான். தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையமும் தமிழ்நாடு தான். தமிழ்நாடு கலாசார மையமாக மதுரை உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடும் உதவுகிறது. தமிழ்நாடு வளர்ந்தால் இந்தியா வளரும். தமிழ்நாடு வளரும் போது இந்தியா வளர்கிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனையில் நாம் முதல் இடத்தில் உள்ளோம். மலிவு விலையில் மக்களுக்கு இணையதள சேவை வழங்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் தமிழ்நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும். தற்போது துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களால் சென்னை, கோவை, மதுரை பயன்பெறும்’ என்றார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction