இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று நாடாளு மன்றத்தில், சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதன்வழி கன்னியாகுமரிக்கான புதிய மக்களவை உறுப்பினராகத் தெரிவாகியுள்ள, விஜய் வசந்த் பதவிப் பிரமாணம் பெற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13-ந் திகதி நடைபெறும். இன்று காலை 11 மணிக்கு ஆலரம்பமாகி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விஜய் வசந், மறைந்த தனது தந்தையாரின் இடத்திற்குப் புதிதாகத் தெரிவாகியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    