free website hit counter

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 தவெக தலைவர் விஜய் பிரசாரம் அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக, விஜய் பிரசாரம் அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

”நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula