website analysis

தமிழ்நாடே உங்களை நம்பி உள்ளது: கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை என்றும் குடும்பம்தான் முக்கியம், பிறகுதான் சமூகம் என முதல்வர் விஜய் சி. ஜோசப் விஜய் இன்று (நவ. 4) தெரிவித்தார்.

சென்னை நீலாங்கரையில் தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று (நவ. 4) நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் பேசியதாவது:

''என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான செல்லங்கள், நண்பா, நண்பீஸ் எல்லோருக்கும் வணக்கம். உங்கள் அம்மா, அப்பாவுக்கு என் வணக்கம்.

ஒரு மேடைக்கு வலுவான அடித்தளம் வேண்டும். இந்த மேடைக்கான வலுவான அடித்தளம் நீங்காள்தான். நம் வாழ்வின் ஊக்க சக்தியே மாணவர்கள்தான்.

நான் முதல்வராக இங்கு வரவில்லை; எப்போதும்போல உங்கள் அண்ணனாக வந்துள்ளேன். உங்களுக்கும் சேர்த்துதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

அரசியல் பேச வந்துள்ளதாக நினைக்க வேண்டாம். நான் ஓட்டு கேட்டு வரவில்லை. கட்சி பற்றி பேச வரவில்லை. இப்போதைக்கு உங்களுக்கு அரசியல் தேவையில்லை. உங்கள் இலக்குகளை நோக்கி முயற்சி செய்யுங்கள். குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பிறகு சமூகத்தை பற்றி சிந்தியுங்கள்.

இந்த சமூகம் உங்களை நம்பியே உள்ளது. நானும் உங்களை நம்பிதான் இருக்கிறேன். தமிழ்நாடே உங்களை நம்பிதான் உள்ளது.

நீங்கள் முன்னோக்கி சிந்திக்கத்தொடங்கிவிட்டீர்கள். அதனுடன் தனித்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதற்கு பலர் தடையாக இருப்பார்கள். அப்படி அவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்றால், நீங்கள் வெற்றி பெறப் போகிறீர்கள் என்று கணித்துவிட்டார்கள் என்று அர்த்தம்.

தடைகளைத் தாண்டி வெற்றி பெற்று விட்டீர்கள் என்றால், வயித்தெறிச்சல்தான். உடன் இருப்பவர்களே நம்மை புறக்கணிப்பார்கள். நாம் வலுவாக இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தாலே வெற்றி நிச்சயம்.

உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத்தான் உங்கள் அண்ணன் வந்துள்ளேன்.

லஞ்சம், போதைப்பொருள் பக்கம் சென்றுவிடாதீர்கள். வாழ்வில் கேலிகள் இருக்கலாம். ஆனால் எந்த தவறுக்கும் அடிமையாகிவிடக் கூடாது. அதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுடன் நான் இருக்கிறேன். என்னுடன் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த உறவு எப்போதும் தொடரும்'' என முதல்வர் விஜய் குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்