பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்துவரும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றுவருகிறது.
பெருந்திரளான பக்கதர்கள் தேரின் வடத்தை இருபக்கமும் பிடித்து வருகின்றனர்.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானதும் சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் திகழ்வது குறிப்பிடதக்கது.
மாபெரும் திருவிழாவாக கொண்டாடப்படும் சித்திரை தேர் திருவிழாவை முதன்முதலில் விஜயநகர அரசவம்சத்தைச் சேர்ந்த விருப்பண்ண உடையார் என்ற பெயர் கொண்ட ஒரு அரசன் நிறுவியதையதாக பின்னர் 60 ஆண்டுகள் கழித்து, கோயில் புதுப்பிக்கப்பட்ட பிறகு 1383ம் ஆண்டில் சித்திரைத் திருவிழா தொடங்கியதாகவும்; இந்த திருக்கோயிலின் நலன் கருதி 52க்கும் மேற்பட்ட கிராமங்களை மன்னன் விருப்பண்ணன் ஒப்படைத்தான் எனவும் வரலாற்றில் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு சித்திரை விதிகளிலும் அதிகாலையில் நம்பெருமாள் சித்திரைத் தேரில் உலா வந்தபின் திருமால் ரேவதி மண்டபம் அடைந்து, திருமஞ்சனம் கண்டருள்வதாக குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை முதல் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்திற்கான மாற்றமும் அமலுக்கு வந்துள்ளது. மேலும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நகர மற்றும் மொஃபுசில் பேருந்துகள் அண்ணா சிலை, ஓடத்துறை சாலை மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.