free website hit counter

2023 இல் 195 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மன்னார் மற்றும் காங்கேசன்துறை கோவிலான் கடற்பரப்பில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை மாலை (டிச.06) வடமத்திய கடற்படை கட்டளை மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில் இவ் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது 4 இந்திய இழுவை படகுகளும் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக் கடற்கரையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டறிந்த இரண்டு கடற்படைக் கட்டளைகளும், இந்திய இழுவைக் கப்பல்களை விரட்டுவதற்காக அவர்களது விரைவுத் தாக்குதல் மற்றும் கடலோர ரோந்துக் கப்பல்களை அனுப்பியுள்ளன.

வட மத்திய கடற்படை கட்டளை 08 இந்திய மீனவர்களுடன் 01 இந்திய வேட்டையாடும் இழுவை படகை பிடித்துள்ளது.

அதேபோன்று, கோவிலான் கடற்பரப்பில் அத்துமீறிச் சென்ற 13 இந்திய மீனவர்களுடன் 03 இந்திய மீன்பிடி இழுவை படகுகளை வடக்கு கடற்படை கட்டளையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அவர்களது மீன்பிடி படகுகளோடு தலைமன்னார் துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகர்களிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட இழுவை படகுகள் உட்பட, 2023 ஆம் ஆண்டில் இதுவரை 31 இந்திய இழுவை படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும், 195 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் கடல் வளம் போன்றவற்றின் விளைவுகளை கருத்தில் கொண்டு, வெளிநாட்டு மீன்பிடி இழுவை படகுகளின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளை கட்டுப்படுத்த இலங்கை கடற்பரப்பில் வழக்கமான ரோந்து மற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்துவதாக இலங்கை கடற்படை தெரிவிக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction