பள்ளி ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன வயது உச்ச வரம்பை, 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உச்ச வரம்பு, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை, சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல், ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுவதகாவும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.