free website hit counter

ஆம்புலன்ஸ்க்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் - அரசாணை வெளியீடு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்புடம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதேபோல், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த அரசாணையில், தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனத்திற்கு வெளியே சரக்குகள், கம்பிகள் இருந்தால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction