website analysis

பிரபல சமையல் கலை நிபுணர் செப் தாமு காலமானார்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரபல சமையல் கலை நிபுணர் செப் தாமு (72), உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானார்.

கே. தாமோதரன் (K. Damodharan) ஆகிய இவர் தொழில் ரீதியாகச் சமையல் கலை நிபுணர் ஆவார். இவர் செப் தாமு என்று அழைக்கப்படுகிறார். இவர் பல்வேறு தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஏராளமான சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி சமையல் போட்டிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் குக்கு வித் கோமாளியில் நடுவராக இருந்தார். 2010-ல், ஒரு தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார். 2004-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பெற்ற முதல் இந்தியச் சமையல்காரர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும், இவர் தமிழ்ப் படங்களில் சில தோற்றங்களில் நடித்துள்ளார்.

டிசம்பர் 2010-ல், தாமோதரன் ஒரு நாளில் 190 கிலோ கிராம் உணவைக் கொண்ட 617 உணவு வகைகளைச் சமைத்தார். இதன்படி டிசம்பர் 21 அன்று காலை 8 மணிக்குச் சமைக்க தொடங்கி 24 மணி நேரம், 30 நிமிடங்கள் மற்றும் 12 வினாடிகளுக்கு அதனை சமைத்து முடித்தார்.

இவரின் சாதனைய பாராட்டி லண்டன் உலகத் தமிழ் அமைப்பு. 2021ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியது. மேலும் அவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. செப் தாமுவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்