free website hit counter

ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்கு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்

காவல்துறை விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தமை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில், ராஜேந்திர பாலாஜி ரூ.7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் 3ஆம் திகதி தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

சொத்து குவிப்பு புகார் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணனும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிப்பதால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பளித்தனர். இதனால், இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு கடந்த மாதம் அவர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அதன்படி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என்று குறிப்பிட்டு வழக்கு விசாரணையை வருகிற 19ஆம் திகதிக்கு தள்ளி வைத்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction