website analysis

அமைச்சரவை மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை முதல்வர் ஜோசப் விஜய் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 6 மாதங்களாக தமிழ்நாட்டுக்கு முழுநேர ஆளுநர் இல்லாமல் இருந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக்கு ஆர்.வி. ஆர்லேகர் தான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனிடையே, ஆர்.வி. ஆர்லேகரை தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை நியமித்தார்.

இந்நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று மாலை 4 மணியளவில் செல்லும் முதல்வர் விஜய், ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பின்போது அமைச்சரவை மாற்றம் தொடர்பாகவும் ஆளுநருடன் முதல்வர் விஜய் ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.வி. ஆர்லேகருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவில்,

“தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்