free website hit counter

புதிய அமைச்சகத்தை உருவாக்கினார் பிரதமர் மோடி.

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரதமர் மோடி ‘ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம்’ என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கி உள்ளார். இதற்குரிய அமைச்சர் இன்று மாலை நியமிக்கப்படுவார்.

இதே நேரம் மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பும் இன்று மாலை வெளியாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. மேற்படி புதிய மத்திய அமைச்சர்களின் தகவல்கள் இன்று மாலை 6 மணியளவில் அறிவிக்கப்படும். சில மத்திய அமைச்சர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மத்திய அமைச்சரவை இந்தியாவின் மிகவும் இளமையான மத்திய அமைச்சரவையாக இன்று உருவாக்கப்பட உள்ளதாக எதிர்வு கூறப்படுகின்றது. பெண் எம்பிக்களுக்கு அமைச்சரவையில் அதிக இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது இவ்வாரிருக்க ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் என்ற இந்த புதிய அமைச்சகத்தை பிரதமர் மோடி நிறுவுவதாக அறிவித்துள்ளார். நாடளாவிய கூட்டுறவு துறையை கவனிப்பதற்காகவும், கூட்டுறவு துறையை வளப்படுத்துவதற்காகவும், புதிய திட்டங்களை உருவாக்கவும், விதிமுறைகளை உருவாக்கவும் இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறவுள்ள மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு அங்கமாக கூட்டுறவு ஒன்றிய அமைச்சரவை நிறுவப்படவுள்ளது. இளம் எம்பி ஒருவருக்கு இந்த புதிய அமைச்சரவை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: