இந்தியாவின் வர்த்தகப் பெருநகரான மும்பை மற்றும் தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், இப்பகுதிகளில் பாரிய வெள்ள அனர்த்தங்களும் நிகழ்த்துள்ளதாகத் தெரியவருகிறது.
தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரம் அடையத் தொடங்கியுள்ள நிலையில், மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்துள்ளதாகவும், அதனால், அங்கு பல்வேறு இடங்களில் 120 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
பல இடங்களில் வாகனங்கள் தண்ணீரில் மிதந்து செல்வதாகவும், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கட்டற்றறு நிரம்பிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் ரயில் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ரயில் போக்குவரத்துக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழை காரணமாகவும், வள்ளம் காரணமாகவும், மும்பையின் இரு வேறு பகுதிகளில், சுவர்கள் சரிந்து விழுந்ததில் , குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளதாகவும், தீயணைப்புத் துறை, மற்றும் தேசியபேரிடர் மீட்புத்துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட போதில் இடிபாடுகளிலிருந்து காயங்களுடன் 16 பேரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.