free website hit counter

திமுகவோடு கூட்டணி பேசினார் எடப்பாடி பழனிசாமி - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்னை எம்.ஆர்.சி.நகர் அலுவலகத்தில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேஜகூட்டணி தோல்வி அடைந்துள்ளது. அதிமுக தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். மக்கள் தீர்ப்பை அதிமுக ஏற்றுக்கொள்கிறது. திமுகவுக்கு எதிராக தொடங்கப்பட்டது அதிமுக. அதிமுகவை உடைக்க வேண்டிய எண்ணம், நோக்கம் எங்களுக்கு இல்லை.அதிமுக உடைய நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்.

நாங்கள் எதிர்த்த திமுக ஆதரவோடு பழனிசாமி முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட விருப்பதாக கூறினார். திமுக - அதிமுக கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி எங்களிடம் பேசினார். திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக.

அதற்கு யாரும் சம்மதிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் பேரதிர்ச்சிக்குள்ளானோம். திமுகவுடன் இணைந்தால் அதிமுக என்பதே இல்லாமல் போய்விடும் என்று கருத்தை நாங்கள் கூறினோம். இது தவறு வேண்டாம் என நாங்கள் சொன்னோம். அதை ஏற்க மறுத்தனர். ஒத்துக்கொள்ளவில்லை.திமுகவுடன் இணையக்கூடாது என்றோம். அதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி, கொறடாவாக சி.விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவை விரைந்து கூட்ட வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரியுள்ளோம். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறோம், யார் மீதும் எங்களுக்கு குற்றச்சாட்டு இல்லை. எல்லோரும் பொறுப்பு என்றுதான் ஏற்கிறோம். அதிமுகவுக்கு புத்துயிர் கொடுக்கப்பட வேண்டும். அதிமுக பொதுக்குழுவை கூட்டி தொடர் தோல்விக்கான காரணங்களை விவாதிக்க வேண்டும்.தேர்தலுக்கு பின் அதிமுக எந்த கூட்டணியிலும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: