free website hit counter

மதுரையில் 200 பள்ளி கட்டிடங்களை இடிக்க ஆட்சியர் உத்தரவு - நெல்லை பள்ளி விபத்தின் எதிரொலி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மதுரை மாவட்டத்தில் பாதுகாப்பற்ற சேதமடைந்த நிலையில் 200 பள்ளி கட்டிடங்களை

இடித்து சீரமைக்க உத்தரவிட்டு உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 2,250 அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 120 வகுப்பறை கட்டிடங்களும், 80 கழிவறை கட்டிடங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்கு மாணவர்கள் செல்லாத வகையில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டிடங்களை முழுமையாக அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும், கட்டிடங்கள் அகற்றும் பணியில் பள்ளி கல்வித்துறையுடன் வருவாய்த்துறையும் ஈடுபட வேண்டும் எனவும், அகற்றப்பட்ட கட்டிடங்கள் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தகவல் தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலியில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை அகற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்து வருகின்றனர்.

திருநெல்வேலி நகரின் திருநகர் பகுதியில் அமைந்துள்ள டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 4 மாணவர்கள் படுகாயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விளையாட்டு பாடவேளையில் மைதானத்தில் விளையாட வந்தபோது கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்ததால் இந்த சோக விபத்து ஏற்பட்டது.

நெல்லை பள்ளியில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரமற்றவை என உறுதி செய்யப்பட்ட கட்டிடங்களை இடித்து, மாற்று கட்டிடம் அமைக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula