free website hit counter

இந்தியாவிலுள்ள டெல்லி, மும்பை ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை கையகப்படுத்தினார்.
இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில் டெல்லி, மும்பையில் உள்ள தனது அலுவலகங்களை ட்விட்டர் நிறுவனம் மூடியுள்ளது. பெங்களூரு அலுவலகம் மட்டும் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள 2 அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார். செலவை குறைக்கும் நடவடிக்கையாக 3 அலுவலகங்களில் இரண்டை மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ட்விட்டர் நிறுவனம் பணிநீக்கம் செய்தது. நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் ட்விட்டரை நிதி ரீதியாக நிலைநிறுத்துவதற்கான முயற்சியாக பல்வேறு நடவடிக்கைகளை, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் எடுத்து வருகிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction