free website hit counter

கோர விபத்து - 6 பேர் பரிதாப பலி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பிய காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த கோர விபத்து காரணமாக காரில் பயணம் செய்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

புறவழிச்சாலையோர 8 அடி ஆழ பள்ளத்தில் அரசு பேருந்தின் முன்பக்க அடியில் சிக்கி கார் நொறுங்கியது. இதனால் உயிரிழந்தவர்களை மீட்பதற்கு போலிசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரமாக போராடினர்.

அதன்பின் பொக்லைன் இயந்திரம் மூலம் பேருந்தின் அடியில் சிக்கிய காரை மீட்டு காரில் உயிரிழந்த 6 பேரின் சடலங்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுனர், நடத்துனர் உட்பட 5 பேர் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது ஏற்பட்ட கோர விபத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction