இன்று இந்தியாவின் 76-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கொண்டாட்டங்களில், இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவும் குதிரைகள் பூட்டிய வண்டியில், விழாநடைபெறும் பகுதிக்கு வந்தபோது, அவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து, அணிவகுப்பு மரியாதைகள் இடம்பெற்றன.
இதேபோன் மாநிலங்களின் தலைநகர்கள் தோறும் தேசியக் கொடி ஏற்றுதலும், சிறப்பான அணிவகுப்பு மரியாதைகளும் நடைபெற்றன.