நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக
இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்க அரசு சார்பில் சலுகைகள், கட்டுப்பாடுகள் போன்றவை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் ஒருவருக்கு மட்டும் 60,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, டிசம்பர் 1ஆம் திகதிக்கும் டிசம்பர் 7ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே இப்போட்டிக்கு தகுதியானவர்கள். இவர்களில் குலுக்கல் முறையில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 60,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அகமதாபாத் மாநகராட்சி அறிவித்துள்ளது.
அகமதாபாத்தில் இதுவரை 78.7 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் 47.7 லட்சம் பேர் முதல் டோஸும், 31 லட்சம் பேர் இரண்டாம் டோஸும் போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.