புலம்பெயர்ந்த தமிழர்களின் நலன் காக்க ‛புலம்பெயர் தமிழர் நலவாரியம்' என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும்
என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாடு வாழ் தமிழர்களின் ளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ‛புலம்பெயர் தமிழர் நலவாரியம்' ஒன்றை உருவாக்கப்படும். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படவுள்ளது.
புலம்பெயர் தமிழர்களின் நலனைப்பேணிட ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதோடு மேலும் புலம்பெயர் தமிழர் குறித்த தரவுதளம் ஏற்படுத்தி அதில் பதிவு செய்வோருக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இதன்மூலம் விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம்,போன்ற பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‛புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக' ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் நாள் கொண்டாடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.