free website hit counter

இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற இந்தியா - அமெரிக்கா சிறப்புப் படைகளின் 13வது கூட்டுப்பயிற்சி நிறைவு!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியா - அமெரிக்கா சிறப்புப் படைகளின் 13வது கூட்டுப்பயிற்சி இமாசலபிரதேசம் பாக்லோவில் இன்று நிறைவடைந்தது.
இந்தியா - அமெரிக்கா சிறப்புப் படைகளின் 13வது கூட்டுப்பயிற்சி "வஜ்ரா ப்ரஹார் 2022" இமாசலபிரதேசம் பாக்லோவில் இன்று நிறைவடைந்தது.

இந்தியா - அமெரிக்கா இடையேயான இந்த வருடாந்தரப் பயிற்சி அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறுகிறது. இதன்படி 12வது பயிற்சி வாஷிங்டனில் உள்ள லெவிஸ் மெக் கார்ட் கூட்டுப் படைதளத்தில் 2021 அக்டோபரில் நடைபெற்றது.

ஐநா சாசனப்படி 21 நாள் நடைபெற்ற இந்தக் கூட்டுப் பயிற்சி இருநாட்டு சிறப்பு படைகளுக்கும் சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. முதல் கட்டத்தில் எதிர்ப்பை முறியடிக்கும் நிலைமை, போர் தந்திர நிலையில் சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவையும் இரண்டாவது கட்டத்தில் 48 மணி நேர மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பயிற்சியும் நடைபெற்றது.

இந்தப் பயிற்சியின் பயன் குறித்து இரு நாடுகளின் படையணிகளும் ஆழ்ந்த திருப்தி தெரிவித்தன. இரு அணிகளும் கூட்டு பயிற்சியோடு திட்டமிடுதல், பல்வேறு ஒத்திகை நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டன.

தற்போதைய உலகச் சூழலில், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் உள்ள தருணத்தில் அமெரிக்க சிறப்பு படைகளுடன் வஜ்ர ப்ரஹார் பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்புப்படைகளின் பாரம்பரிய நட்புறவை, இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி மேலும் வலுப்படுத்தும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula