சுவிற்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுநோயியல் தொடர்பில் இரு மகிழ்வான செய்திகள் அல்லது மேம்பட்ட செய்திகள் உள்ளன என சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசின் (FOPH) இன் தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் வர்ஜீனி மஸ்ஸெரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந் தொற்றின் முதல் அலையின் போது பெருமளவு பாதிப்புக்களைச் சந்திக்காத சுவிற்சர்லாந்து, கடந்த குளிர்கால ஆரம்பத்தின் போது, ஏற்பட்ட இரண்டாம் அலையின் தாக்கத்தில் பெருமளவு பாதிப்புக்களைச் சந்தித்தது. இந்த நிலையில் இருந்து படிப்படியாக மாற்றங்கண்டு வந்தது. தற்போது நேர்மறை விகிதம், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக வர்ஜீனி மஸ்ஸெரி கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த நல்ல செய்தியின் இரண்டாவது பகுதி என்னவென்றால், சுவிட்சர்லாந்தில் பயன்படுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளான மாடர்னா மற்றும் ஃபைசர் / பயோன்டெக் தடுப்பூசிகள், இந்திய மாறுபாடு உள்ளிட்ட கோவிட் பிறழ்வுகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று சுகாதார அதிகாரிகள் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.