சுவிற்சர்லாந்தில் தடுப்பூசிகளின் மீது சந்தேகமுள்ளவர்கள், கொரோனா தொற்றாளர்களைத் தேடிப் பழகுவதாகத் தெரியவந்துள்ளது.
இதனை நம்புவது கடினமாக உள்ள போதும், சுவிட்சர்லாந்தில் இதைச் செய்பவர்கள் உண்மையில் உள்ளனர் என சுவிஸ்பொது ஒளிபரப்பாளரான RTS இன் அறிக்கையின்படி தெரிய வந்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் தடுப்பூசி-சந்தேகமுள்ள நபர்கள் சிலர், கொரோனா வைரஸைத் தொற்றிக் கொள்வதற்கு, அதிக முயற்சி செய்கிறார்கள் என்றும், அதனால் அவர்கள் குணமடைந்த பிறகு கோவிட் சான்றிதழைப் பெறலாம் என்பது நோக்கமாக இருப்பதாகவும், இதற்காகவே வைரஸைப் பரப்பக்கூடிய அசுத்தமான நபர்களை அவர் தேடித் தொடர்பு கொள்கின்றார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இருப்பினும், இந்த நடைமுறை ஆபத்தானது மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட. வேண்டுமென்றே கொரோனா வைரஸைக் தொற்றிக் கொள்வது கிரிமினல் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று RTS தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, கோவிட் காரணமாக சுவிட்சர்லாந்தில் ஆயுட்காலம் குறைந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2020 ஆம் ஆண்டில் சுவிஸ் மக்களின் நல்வாழ்வில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, ஆண்களின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட ஒரு வருடமும் பெண்களுக்கு ஆறு மாதங்களும் குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இதன்படி ஆண்களின் ஆயுட்காலம் 2019 மற்றும் 2020 க்கு இடையில் ஒன்பது மாதங்கள் குறைந்து 81 வயதை எட்டியது. பெண்கள் மத்தியில், குறைவு சிறியதாக இருந்தமையால், (அரை வருடம்) 85.1 ஆண்டுகள் அடையும் எனத் தெரிய வருகிறது.