சுவிற்சர்லாந்தில் கோவிட் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதை சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் இன்று பிற்பகலில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொற்றுநோய் நிலைமையை ஆய்வு செய்ய ஃபெடரல் கவுன்சில் இன்று கூடும் போது, மாநிலங்களின் ஆலோசனையைக் கவனத்திற்கொள்ளும். பெரும்பான்மையான மாநிலங்கள் தெரிவித்திருக்கும் சாதகமான கருத்தின் அடிப்படையில், சுகாதார "அமைச்சர்" அலைன் பெர்செட், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்யுமாறு அரசாங்க சகாக்களுக்கு முன்மொழிய தயாராக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகளுக்கான முக்கிய தகவல்!
இதன்படி, நாளை வியாழக்கிழமை முதல், எல்லா நிகழ்தகவுகளிலும், சுவிஸ் மக்களின் வாழ்வியல் தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தில் இருந்த நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பொது போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள், முதியோர் இல்லங்களில் முகமூடியின் தேவை இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான மாநிலங்கள் வலியுறுத்தியுள்ளன எனவும் அறிய வருகின்றது.
இதன்படி என்ன மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படலாம் ?
பார்கள், உணவகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களுக்கான கோவிட் சான்றிதழ் தேவை இல்லாது போகும். தனிப்பட்ட சந்திப்புகளுக்கான வரம்புகளும் நீக்கப்பட்டு, பெரிய நிகழ்வுகளுக்கான அங்கீகாரத் தேவை நிறுத்தப்படும். ஆயினும், மாநில அரசுகள், தமது மாநிலங்களில் முகமூடிகளை பள்ளிகளில், வேலை அல்லது கடைகளில் வைத்திருக்க முடிவு செய்யலாம். எது எப்படியாயினும், பெப்ரவரி 17 நிச்சயமாக சுவிட்சர்லாந்தில் இயல்பு நிலைக்கு திரும்புவதைக் குறிக்கும் திகதியாக இருக்கும் எனவும், மார்ச் மாத இறுதியில் மீதமுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளும் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில் நாளை (பெப்ரவரி 17 ) வியாழக்கிழமையின் விடியல் சுவிற்சர்லாந்தில் கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெற்ற நாளின் விடியலாக அமையலாம்.