இத்தாலியின் பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் பேத்தி ரேச்சல் முசோலினி, ரோம் நகர மன்றத் தேர்தலில் மிகவும் பிரபலமான வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.
அக்டோபர் 3 ம் திகதி நடைபெற்ற ரோம் நகராட்சி தேர்தலின் இறுதி முடிவுகள் நேற்று புதன்கிழமை வெளியாகின. வாக்களிக்கப்பட்ட் 97 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் பெறப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ரேச்சல் முசோலினி 8,200 க்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார் எனத் தெரிய வருகிறது.
சுவிற்சர்லாந்தில் தொற்றியல் நிலைமை மேம்பட்டு வருகிறது - வர்ஜினி மஸ்ஸெரி (FOPH)
அவரது இந்த மக்கள் ஆதரவுக்கு, அவரது குடும்பப்பெயருக்கும் புகழுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ரோம் நகர கவுன்சிலராக இரண்டாவது முறையாக பணியாற்றும் 47 வயதான அவர், அவர்களின் குடும்பப்பெயரை விட மக்கள் மனங்களில் நிறைந்துள்ளார். "எனக்கு பல இடதுசாரி நண்பர்கள் உள்ளனர்" என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய சர்வாதிகாரியான முசோலியின் சந்ததியினர் பலர் அரசியலுக்குச் சென்றிருக்கிறார்கள்என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் உள்ளாட்சித் தேர்தல்களில் மிலன், நேபிள்ஸ் மற்றும் பொலோன்யா போன்ற முக்கிய நகரங்களில், வலதுசாரி கட்சிகள் ஒட்டுமொத்தமாக மேயர் பதவிகளை இழந்துள்ளன என அறிய வருகிறது.