free website hit counter

சுவிற்சர்லாந்திலும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்திலும் ஒமிக்ரான் (Omicron) வைரஸ் தரிபின் முதல் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு சுவிஸ் மத்திய கூட்டாட்சி சுகாதார அலுவலகம் (FOPH) அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோவிட் வைரஸ் திரிபான ஒமிக்ரானின் தொற்று மாதரிகள், ஒரு வாரத்திற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் இருந்து சுவிற்சர்லாந்துக்கு திரும்பி வந்த ஒரு நபரிடம் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் மாறுபாடு ஐரோப்பாவிற்கு 'மிக உயர்ந்த' ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என ஐரோப்பிய ஒன்றிய சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், ஈரோப்பிய நாடுகள் இதன் பரவலைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு விதிமுறைகளை மீண்டும் இறுக்கமாக ஆலோசித்து வருகின்றன.

சுவிற்சர்லாந்து, ஏற்கனவே அறிவித்திருந்த, தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில், டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலியாவையும், இணைத்துள்ளது.

உலகை மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்டின் மிக வீரியமான ஒமிக்ரோன் திரிபு!

இன்றைய நிலவரப்படி, போர்த்துக்கல், கனடா, நைஜீரியா மற்றும் ஜப்பான் ஆகியவை ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில் உள்ளன. இதன்படி சுவிஸ் குடிமக்கள் மற்றும் சுவிட்சர்லாந்திற்குத் திரும்பும் நிரந்தர குடியிருப்பாளர்கள் உட்பட இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள், வருகையின் போது எதிர்மறையான சோதனையை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் தடுப்பூசி போடப்பட்டாலும் அல்லது வைரஸிலிருந்து மீண்டிருந்தாலும் இவற்றினன் கடைப்பிடிக்க வேண்டும். இதைவிட மாநில அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதோடு, 4வது நாளிலிருந்து 7வது நாளுக்கு இடையில் அவர்கள் மற்றொரு சோதனையைச் செய்ய வேண்டும். இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் 16 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இது பொருந்தும்.

புதிய கோவிட் நடைமுறைகள் தொடர்பான அவசர ஆலோசனை ஒன்றினை இன்று கூட்டமைப்பு அரசு மேற்கொள்கின்றது.

இது இவ்வாறிருக்க, கோவிட் பெருந் தொற்றினை நிரவகிப்பதற்கான அரசாங்கத்தின் சட்ட வரைபுகளுக்கு மக்கள் ஆதரவைக் கோரி, சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெடுப்பின் முடிவுகள் குறித்து பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் மற்றும் பொருளாதாரத் துறையினர் தங்கள் நிம்மதியையும் திருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த வாக்கெடுப்பில் 62 சதவீத சுவிஸ் வாக்காளர்கள் தொற்றுநோயை நிர்வகிப்பதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், கோவிட் சான்றிதழ்கள் தொடர்பான செயற்திட்டங்களையும் ஆதரித்துள்ளனர். இதன் மூலம், கோவிட் தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு பெருமளவிலான மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction