free website hit counter

இத்தாலியும் முகமூடித்தேவை எனும் விதியினை நீக்குகிறது ?

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், ஜூன் 28 முதல் வெளிப்புறங்களில் எல்லா நேரங்களிலும் முகமூடிகளை அணிய வேண்டிய தற்போதையகட்டளையை தளர்த்துவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந் ஆண்டு அக்டோபர்(2020) முதல் இத்தாலியில் முகமூடிகளை வெளியிலும், வீட்டிலும் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த விதிகள், ஜூன் 28 திங்கள் முதல் இத்தாலியில் வெளியில் எல்லா நேரங்களிலும் முகமூடிகள் கட்டாயமாக இருக்காது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

முகமூடித் தேவையை நீக்குவது எனும் இத்தாலியின் வகைப்பாடு முறையின் கீழ் “வெள்ளை” என்று பெயரிடப்பட்ட பகுதிகளில் நடைமுறைக்கு வரும் என்று சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

இந்த வகைப்பாடு ஏற்கனவே வடமேற்கில் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு தவிர அனைத்து இத்தாலிய பகுதிகளையும் உள்ளடக்கியது, மேலும் இது 28 ஆம் தேதி முதல் முழு நாட்டிற்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில் அறிவிக்கப்பட்ட மறு திறப்பு - முகமூடிகள் விலக்கப்பட்டதா ?

இத்தாலியின் (சி.டி.எஸ்) விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின் பேரில் இறிவிக்கட்டடுள்ள இந்த தளர்வு, வைரஸைப் பரப்பும் அதிக ஆபத்து உள்ள நிகழ்வுகளுக்கும், பெரிய கூட்டங்கள் போன்றவற்றிலும், மக்கள் முகமூடிகளைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இத்தாலியில் வைரஸின் இந்திய புதிய மாறுபாட்டால் ஏற்பட்ட சில தொற்றுக்கள் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோய்த்தொற்றுகளுக்குப் பின்னால் உள்ள வைரஸ் விகாரத்தை அடையாளம் காண ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான சோதனைகளை நாடு பகுப்பாய்வு செய்கிறது.

புதிய வகைகள் குறித்த அக்கறை காரணமாக, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து பயணத் தடையை நீட்டித்து. இங்கிலாந்தில் இருந்து வருபவர்களுக்கு ஐந்து நாள் தனிமைப்படுத்தப்பட்ட தேவையை கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction