free website hit counter

இத்தாலியில் நடைபெறும் "ஈரோ 2020" போட்டிகளுக்கு இங்கிலாந்திலிருந்து ரசிகர்கள் வரமுடியாது ?

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐரோப்பிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் 'ஈரோ 2020' காற்பந்தாட்டப் போட்டித் தொடர்களின் வரிசையில், எதிர்வரும் சனிக்கிழமை ரோமில் நடைபெறவுள்ள கால் இறுதிப் போட்டியில் உக்ரைனுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடுகிறது.

இந்தக் கால் இறுதிப் போட்டியை நேரில் காணும் எண்ணத்தில் ரோம் செல்ல வேண்டாம் என்று இத்தாலிய அரசாங்கம் நேற்று புதன்கிழமை இங்கிலாந்து ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இத்தாலிக்கு வருபவர்கள் அனைவரும் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் இரண்டு கொரோனா வைரஸ் பரிசோதனைகளை எடுக்க வேண்டும். ஆனால் சில ரசிகர்கள் இந்த விதிகளை அறிய மாட்டார்கள் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

"ஜூலை 3 ம் தேதி உக்ரைனுக்கு எதிரான ஒலிம்பிகோவில் நடைபெறும் போட்டியைக் காண ஆங்கில ரசிகர்கள் இத்தாலிக்கு வர முடியாது" என்று இத்தாலிய இளைய சுகாதார அமைச்சரான ஆண்ட்ரியா கோஸ்டா புதன்கிழமை ஒரு வானொலிச் செய்திக்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தல் உள்ளது. விதி மதிக்கப்பட வேண்டும். நாம் ஆபத்துக்களை எடுக்க முடியாது. ஒரு ஆங்கில ரசிகர் இன்று அல்லது நேற்றோ இங்கிலாந்திருந்து வந்திருந்தால் அவர் போட்டியை நேரில் காண முடியாது " என்றார்.

லண்டனில் உள்ள இத்தாலிய தூதரகம் புதன்கிழமை தனது சமூக ஊடக சேனல்களில் இடுகைகளில் "யூரோ 2020 போட்டிகளுக்கு பயணிக்கும் ரசிகர்களுக்கு இத்தாலியின் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை" என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ரசிகர்கள் பயணிக்க முயன்றால் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் சாலை சோதனைச் சாவடிகளில் பொலிஸ் சோதனைகளை அதிகரிக்க இத்தாலியின் உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும் இத்தாலிய செய்தி நிறுவனம் அன்சா தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து இரசிகர்களின் வருகையை இவ்வளவு கடுமைதயாக இத்தாலி எதிர்கொள்வதற்கான காரணம், இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாட்டின் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்குகள் பிரிட்டனில் அதிகரித்துக் காணப்படுவதாகும்.

இது இவ்வாறிருக்க, நாளை வெள்ளிக்கிழமை காலிறுதியில் ஸ்பெயினுக்கு எதிராக சுவிஸ் தேசிய அணி விளையாடுவதைக் காண ரஷ்யாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன்பெர்செட் அறிவுறுத்தியுள்ளார்.

டெல்டா வைரஸ் தொற்றுநோய்களின் எழுச்சியை ஏற்படுத்துகின்ற ரஷ்யாவை சுவிற்சர்லாந்து ஏன் சிகப்புப் பட்டியலில் சேர்க்கவில்லை என்று புதன்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கேட்டதற்கு, “டெல்டா மாறுபாடு ஏற்கனவே இங்கு இருப்பதால் இதை செய்ய வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். ஒரு மாறுபாடு ஆதிக்கம் செலுத்தியவுடன், அதே சூழ்நிலையில் இருக்கும் பிற நாடுகளை பட்டியலில் சேர்ப்பது இனி அர்த்தமல்ல ” என அவர் பதிலளித்தார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction