இத்தாலியில் அடுத்த வரும் சில நாட்களில் நாடு முழுவதும் கனமழை, புயல், மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரத்தில் தெற்கு இத்தாலியில் கடுமையான புயல்காற்று தாக்கிய பிறகு, புதிய "தீவிர" சூறாவளி ஒன்றின் காரணமாக, புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய மழை மற்றும் குளிர் காலநிலை மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய வானிலை முன்னறிவிப்பாளர் Il Meteo தெரிவிக்கிறது.
வடக்கு அட்லாண்டிக்கிலிருந்து வரும், 'பாப்பியா' என்று அழைக்கப்படும் புயல், ஏற்படுத்தும் இது குளிர்ந்த காற்றழுத்தத்தால், கிழக்கே சார்டினியா மற்றும் லிகுரியா இடையேயான கடல் பகுதியில் உருவாகும் "ஒரு சூறாவளி சுழல்" நாட்டின் மத்திய மற்றும் வடக்கு பிராந்தியங்களில் பாதகமான காலநிலையை ஏற்படுத்தும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த மோசமான நிலை நகர்ந்து காம்பானியாவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு "பலத்த காற்றுடன் மழையும், கடுமையாக இடி மின்னல் தாக்கங்களும், குறிப்பாக கடற்கரைகளுக்கு அருகில் ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் குளிர்ந்த காற்றின் வருகையினால் இத்தாலியின் வெப்பநிலை கூர்மையான வீழ்ச்சியை அடையும். இதனால் வடக்குப் பகுதிகளில் மிகவும் கவனிக்கத்தக்க வகையில், ஒப்பீட்டளவில் உயரம் குறைந்த பிரதேசங்கள் வரை பனிப்பொழிவு சாத்தியமாகும் என்று Il Meteo தெரிவித்துள்ளது.