சுவிற்சர்லாந்தில் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்கிறதா ? இது என்ன கேள்வி. மலையும், இயற்கையும் மிகுந்த நாட்டில் நன்றாகவே இருக்கும் என நம்பக் கூடியவர்களுக்கு அதிர்ச்சி தரும் பதிலாக அமைகிறது ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் (EEA) சொல்வது.
குறிப்பாக மற்றைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது சுவிஸ் நகரங்களில் காற்று மிகவும் சுத்தமாக இல்லை என்பதை, ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் (EEA) 300 நகரங்களின் காற்றின் தரத்தினைத் தரவரிசைப்படுத்திய பொது தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு நிறுவிய மெட்ரிக் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாசுபாட்டின் அளவு “மிதமானதாக” மதிப்பிடப்பட்டது என்றாலும், சூரிச் 54 வது இடத்திலும், பாசல் 95 வது இடத்திலும், லுகானோ 161 வது இடத்திலும் உள்ளதாகத் தெரியவருகிறது.
உலகின் வாழ்வாதார தரவரிசையில் அதிக மதிப்பெண் பெற்ற சுவிற்சர்லாந்தின் சூரிச் மற்றும் ஜெனீவா ஆகிய இரு நகரங்களும் முதல் 10 இடங்களுக்குள் வந்த ஒரே ஐரோப்பிய நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.