இத்தாலியின் லோம்பார்டியா பகுதியில் பூமி அதிர்ந்தது. இதன் அதிர்வுகள் டிசினோவிலும் பரவலாக உணரப்பட்டது. இன்று காலை 11.30 மணியளவில், நிகழ்ந்த இந்த அதிர்வு, 4.3 மற்றும் 4.9 மக்னூட் அளவில் இருந்ததாக, சுவிஸ் நில அளவுச் சேவை நிலையம் அறிவித்துள்ளது.
பெர்கமோ அருகே 11.34 மணிக்கு 4.3 மற்றும் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இது மக்களால் பரவலாக உணரப்பட்டதாகவும், இத்தாலிய நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோபிசிக்ஸ் அண்ட் வோல்கானாலஜி (INGV ) தெரிவித்துள்ளது. இதன் ட்வீட்டர் குறிப்பின்படி, 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், போனட் சோட்டோ Bonate Sotto நகருக்கு அருகில் 26 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
சுவிற்சர்லாந்தில் அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்றும், அரசின் புதிய நடவடிக்கைகளும் !
இந்த நிலநடுக்கம் டிசினோவிலும் அதிகமாக உணரப்பட்டது. சோத்தோ செனெரியில், எல்லாமே 10 வினாடிகள் அதிர்ந்தன. மிலானோ நகரில் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின, சிலர் பயந்து தெருக்களில் இறங்கினர்.