free website hit counter

கிறிஸ்மஸை 'நெருக்கமான வட்டத்துடன்' கொண்டாடுங்கள் - ஜேர்மன் சுகாதார அமைச்சர்

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜேர்மன் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக், ( Karl Lauterbach ) நேற்று வியாழன் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை, நெருங்கிய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மட்டும் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு மக்களுக்கு அறிவித்தார்.

"நாங்கள் அனைவரும் விடுமுறை நாட்களை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் செலவிட விரும்புகிறோம், ஆனால் அது வைரஸுக்கு கொண்டாட்டமாக இருக்கக்கூடாது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், ஓமிக்ரானுக்கு ஒரு கிக்-ஸ்டார்ட் ஆகாமல் இருப்பதை உறுதிசெய்ய நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.

"உண்மையில் இந்த நேரத்தை மிகச்சிறிய வட்டத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் மட்டுமே செலவிடுங்கள்.ஆபத்தில் உள்ள குழுக்களைச் சேர்ந்த நபர்களைச் சந்திக்கும் போது, ​​முழுமையாக தடுப்பூசி போட்டாலும் கோவிட் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

சமீபத்திய நாட்களில் ஜெர்மனியில் வழக்குகள் குறைந்துவிட்டாலும், பல தீவிர சிகிச்சை பிரிவுகள் இன்னும் போராடி வருகின்றன. ஜெர்மனியில், இதுவரை பல நூறு ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் தடுக்க முடியாத' ஓமிக்ரான் அலையை ஜெர்மனி எதிர்கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: