ஜேர்மனியில் கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தினை மறுபடியும் நடத்துவதற்கு ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனி தற்போது வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்கிறது. இதன் காரணமாக, ஜூலை தொடக்கத்தில் நீக்கப்பட்ட விதி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிய வருகிறது.
அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் செங்குத்தாக அதிகரித்து வருகின்றன. ஜேர்மனியின் தடுப்பூசி விகிதம் 67 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஆயினும் இன்னும் பெரும்பாலான மக்களை தொற்று மற்றும் கடுமையான நோய்க்கு ஆளாக்குகிறது.
சுவிற்சர்லாந்து மருத்துவமனைகள் குளிர்காலத்தில் 30,000 கொரோனா நோயாளிகளை அனுமதிக்க வேண்டியிருக்கும் !
இன்று திங்கட் கிழமை புள்ளி விபரங்களின்படி, ஐரோப்பாவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜேர்மன் நாட்டில் தொற்று ஒரு புதிய உச்சத்தை எட்டியது. ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (RKI) சுகாதார நிறுவனம் படி, 100,000 பேருக்கு 300 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.