பேஸ்புக் ட்விட்டர்னு தங்கள் கருத்துக்களையும் தங்கள் உணர்வுகளையும் எழுத்து வடிவத்தில் எழுதி எழுதி கலைத்து போனவர்களையை பூஸ்ட் செய்யும் வகையில் புது வருகை தந்திருக்கின்றது இந்த Club House.
பேச்சு வடிவில், உரையாடல் மூலமாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள அறிமுகமாகியிருப்பதே இந்த க்லப் ஹவுஸ் எனும் செயலி இதன் மூலம் பேச்சாற்றல் மிக்கவர்கள், தங்கள் கருத்துக்களை எழுத்துவடிவத்தை விட இன்னமும் உறுதியாக வெளிக்காட்ட விரும்புவோருக்கு இந்த செயலி மிகவும் உகந்ததாக காணப்படுகின்றது வெறுமனே தொலைபேசி இலக்கத்துடன் எமக்கான ஒரு கணக்கினை ஆரம்பிக்க முடியும் அதன்பின் எமக்கு பிடித்தமான தலைப்பிலே ஒரு Club House Room எனும் அறையினை ஆரம்பித்து அந்த தலைப்பிலான உறையாடல்களை மேற்கொள்ளமுடியும் இந்த அறையின் தலைப்பை விரும்புவோர் இந்த அறையினைல் நுழைந்து கருத்தாடல்களை செவிசாய்க்க முடியும் மேலும் அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் அந்த அறையினை ஆரம்பித்த moderator இடம் அனுமதியினை பெற்றுக்கொண்டு தங்களையும் பேச்சாளர்களாக இணைத்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை பகிரலாம்.
கடந்த ஆண்டு பாவனைக்கு வந்த இந்த செயலி கொரோனாவினால் முடங்கி கிடக்கும் மக்களின் மனநிலையை மாற்றுவதற்கான நோக்கத்துடனேயே ஆரம்பிக்கப்பட்டது ஆரம்பத்தில் இது அமெரிக்காவில் வேகமான பாவனையாளர்களை கவர்த்தபோதும் 2021லேயே உலகம் முழுவதும் பாவனையாளர்களை தக்கவைத்துள்ளது. இன்றுவரை 5+ மில்லியன்பேர் பாவனையாளர்களாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-வின்சம்-