கொரோனா பாதிப்புக்களிலிருந்து மெல்ல மீட்டெடுக்கும் நம்பிக்கை செய்திகளுடன் நம்பிக்கையை மீட்டெடுக்கும் திட்டங்களில் ஒன்று பாகிஸ்தானிலிருந்து வருகிறது.
2020 ஆம் ஆண்டின் உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் உலக வெப்பநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 1999-2018 முதல், 150 க்கும் மேற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளாக (வெப்ப அலைகள், வறட்சி, வெள்ளம் போன்றவை அந்நாட்டில் பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது, அவை உலகளாவிய காலநிலை மாற்றம் மோசமடைவதால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்தே அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான், 2018ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தினால் பெருகிவரும் விளைவுகளை எதிர்கொள்ள ஒரு திட்டத்தினை கொண்டுவந்தார். அது நாட்டிற்கு நன்மை பயக்கும் 10 பில்லியன் சுனாமி மரநடுகை முயற்சியே ஆகும். இத் திட்டமானது ஐந்து ஆண்டு காலப்பகுதியில் பாலைவன நிலப்பரப்பில் பெயரிடப்பட்ட பத்து பில்லியன் மரங்களை நடவு செய்ய முயல்கிறது.
இப்போது ஏற்பட்டிருக்கும் இடர்காலப்பகுயில் இந்த முயற்சியை மீண்டும் கருவியாக ஆக்கியுள்ளது அந்நாடு; இது பாகிஸ்தானின் மக்கள் மீது வைரஸின் சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை எதிர்த்துப் போராட உதவிவருகிறது.
வைரஸ் பரவுவதைத் தணிக்க மார்ச் 23 முதல் பாகிஸ்தான் லாக்டவுனில் இருந்தாலும், இந்த திட்டத்துடன் தொடர்புடை நாட்கூழி தொழிலாளர்களுக்கு பிரதமர் விதிவிலக்குகளை வெளியிட்டுள்ளார். கூடுதலாக, இந்த நகராட்சி லாக்டவுனில் வேலையின்மையை எதிர்கொள்ளும் 63,000 தொழிலாளர்களை அவர் தொடர்ந்து காடு வளர்ப்பில் பணியமர்த்தியுள்ளார்.
தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு அவர்களின் வழக்கமான ஊதியத்தில் பாதிக்கு மேல் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது, அத்தோடு பாகிஸ்தானில் வேலையின்மை பிரச்சினையின் ஒரு பகுதியளவு சீர்செய்ய உதவுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வைரஸ் பாதிப்பு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே தொழிலாளர்கள் அங்கே பணியில் ஈடுபடுகிறார்கள்.
ஆரம்பகாலப்பகுதியிலிருந்தே நல்ல பலனை விளைவித்துவரும் இத்திட்டத்தின் ஊடாக பஞ்சாப் பகுதியில் மட்டும் சுமார் 30 மில்லியன் மரகன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இக்காடு வளர்ப்பு திட்டம் இவ்வருடத்திற்குள் சுமார் 50 மில்லியன் மரங்களை நாட்டும் நம்பிக்கையை கொண்டுள்ளது.
இவ்வாறன அதிகரித்த முயற்சிகள் பற்றிய செய்திகள் சில இறந்த கால நிகழ்வுகளையும் நினைவுபடுத்தியிருக்கிறது. 1930களில் அமெரிக்காவில் கடுமையான தூசி புயல்கள்: கிரேட் ப்ளைன்ஸ் மாநிலங்களை அழித்தன. பேரழிவு தரும் புயல்கள் இன்று நாம் எதிர்கொள்ளும் காலநிலை நெருக்கடியைப் போலவே, மனிதனால் உருவாக்கப்பட்டது. 1920 களின் முற்பகுதியில், விவசாயிகள் புதிய இயந்திரமயமாக்கப்பட்ட விவசாய உத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவு சுமார் 35 மில்லியன் ஏக்கர் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு, 100 மில்லியன் ஏக்கர் பரப்பளவிலான வளங்கள் நாசமாகின.
தூசி புயல்களுக்கு எதிராக இயற்கையான தடையை வழங்குவதற்காக அக்காலப்பகுதியில் அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் (FDR) அவர்கள் புதிய ஒப்பந்தத்தின் படி; மக்களை பொதுப்பணித்திட்டங்களுக்கு நியமித்து மரம் நடும் செயற்பாட்டை ஆரம்பித்தார். இது வேலையின்மை பிரச்சினையை போக்குவதற்கும் அக்காலப்பகுதியில் உதவியது. அதனைப்போன்றதோரு திட்டமே இப்போது பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்டு வருகிறது
சமூல வலைத்தளத்தில் #Plant4Pakistan எனும் ஹாஸ்டாக் வழி இத்திட்டத்திற்கான பிரச்சாரங்கள், பதிவுகள் வெளியாகிவருகிறது. பாகிஸ்தான் பிரதமரின் காலநிலை மாற்ற ஆலோசகர் மாலிக் ஆமின் அஸ்லாம் <<நீங்கள் இயற்கையில் முதலீடு செய்யும் போது அது உங்களுக்குத் பன்மடங்கு திருப்பித் தருகிறது>> எனக் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இந்நிலைமை அழுத்தமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து உங்களை மீட்கிறது என்ற மதிப்புமிக்க பாடத்தையும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது என தெரிவிக்கின்றனர்.
நன்றி - மூலம் : mymodernmat