தொற்றுநோய் காலப்பகுதியில் பிரிந்த பல குடும்பங்களை போலவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விவசாயி தனது அன்பானவர் இறந்தபின் விடைகொடுத்த அனுப்பிவைக்கமுடியவில்லை.
ஆனால் அவர் செலுத்திய அஞ்சலி நீங்கா இடம்பிடித்துக்கொண்டது.
ஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸில் 400 கிமீ (248 மைல்) தொலைவில் இருந்த விவசாயி ஒருவர் குயின்ஸ்லாந்தில் வசித்து வந்த அவரது அத்தையை புற்றுநோய் காரணமாக இழந்தார்.
அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரிஸ்பேனுக்கு செல்ல பயணக்கட்டுப்பாடுகள் தடை விதித்தன.
எனவே அவர் தனது அன்பு அஞ்சலிகளை ஆடுகள் மூலம் காண்பித்து செலுத்திக்கொண்டார்.
திறந்த வெளியில் இதய வடிவத்தில் தானியங்களை பரப்பி வைத்து தனது ஆட்டு மந்தையை விடுவித்தபோது, ஆயிரக்கணக்கான ஆடுகள் புல்வெளியில் பாய்ந்து பரந்துவந்து வடிவத்தை நிரப்பிக்கொண்டது.
ட்ரோன் கமெரா மூலம் பதிவு செய்யப்பட்ட அக்காட்சியை சமூக வலைத்தளங்களில் விவசாயி பகிர்ந்து கொண்ட பிறகு அது வைரலாகிவிட்டது.