WhatsApp பயனர்கள் தங்கள் சாதன கடவுச்சொல் அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் மூலம் தங்கள் உரையாடல்களை பூட்ட அனுமதிக்க, மே மாதத்தில் “Locked chats” அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியது. இந்த பூட்டிய உரையாடல்கள், பட்டியலில் தோன்றும் "Locked chats" கோப்புறையின் பின்னால் மறைக்கப்பட்டுள்ளன.
சீக்ரெட் கோட் அம்சத்தின் மூலம் உரையாடல் பட்டியலில் இருந்து லாக் செய்யப்பட்ட உரையாடல்கள் கோப்புறையை மறைக்க, உங்கள் சாதனத்தின் கடவுச்சொல்லிலிருந்து வேறுபட்ட கடவுச்சொல்லை அமைக்கலாம். மேலும் வாட்ஸ்அப் தேடல் பட்டியில் உங்கள் ரகசியக் குறியீட்டைத் தட்டச்சு செய்வதன் மூலம் மட்டுமே அதைக் கண்டறிய முடியும்.
புதிய ரகசியக் குறியீட்டை உருவாக்க, எழுத்துக்கள், எண்கள், சிறப்பு எழுத்துகள் மற்றும் எமோஜியைப் பயன்படுத்தலாம். மேலும் லாக் செய்யப்பட்ட உரையாடல்களை நீங்கள் மறைக்க விரும்பவில்லை என்றால் அவற்றை உங்கள் உரையாடல் பட்டியலில் தொடர்ந்து வைத்திருக்கலாம்.
சீக்ரெட் கோட் அம்சம் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் வரும் மாதங்களில் அனைத்து பயனர்களுக்கும் உலகளவில் கிடைக்கும்.