கடந்த சில மாதங்களாக சமூக வளையங்கள் பட்டியலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த க்ளப்ஹவ்ஸ் பாவனையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியூட்டும் தகவல் ஹேக்கர்கள்னினால் வெளியிடப்பட்டது .
அதாவது க்ளப்ஹவ்ஸ் பாவனையாளர்களின் தொலைபேசி இலக்கங்கள் அனைத்தும் க்ளப்ஹவ்ஸ் சேர்வரில் இருந்து திருடப்பட்டுள்ளது. சுமாராக 3.8 பில்லியன் தொலைபேசி இலக்கங்கள் திருடப்பட்டுள்ளன அன்னலவாக இது உலக சனத்தொகையில் அரைவாசி ஆகும்.
எனினும் திருடப்பட்ட அனைத்து இலக்கங்களும் எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி ( கூகுல் நிறுவனத்தின் 23வது பிறந்த தினம் ) அன்று ஏலத்தில் "டார்க் வெப்" இணையத்தில் விற்பனைக்கு விடப்படும் என குறித்த ஹேக்கர்கள். தெரிவித்துள்ளனர்
-வின்சம்