free website hit counter

எண்ணம்போல் வாழ்க்கை : அழிந்த காட்டை மீண்டெடுத்த புகைப்படக்கலைஞர்

கட்டுரைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

20 வருடங்களில் 2 மில்லியன் மரங்களை நட்டு பிரேசிலின் அழிந்த காட்டை மீட்டெடுத்த மாபெரும் முத்தாய்ப்பில் சல்காடோ மற்றும் அவரது மனைவி லீலியா பேசப்பட்டுவருகின்றனர்.

புவி வெப்படைதல் மற்றும் காலநிலை மாற்றங்களை நமக்கு அப்படியே திருப்பி தந்துக்கொண்டிருக்கும் இயற்கை அன்னையை குளிர்விக்க நாம் தொடர்ந்து போராடுகிறோம். ஆனால் பொறுப்பற்று செயலாற்றும் மனிதர்களினாலேயே பூமித்தாய் சினம் கொண்டு பழிவாங்குகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

நாம் இப்போது மித மிஞ்சியிருக்கும் வளங்களையாவது காப்பற்றவேண்டிய நீண்ட பயணத்தில் சஞ்சரிப்பதால் புதைபடிவ எரிபொருட்களுக்கான மாற்று வழிகளையோ அல்லது நச்சுக் கழிவுகளுக்கான தீர்வுகளையோ காண முடியாத போதும் நமது காடுகளை காப்பற்றுவதில் கவனம் செலுத்தலாம். ஆம் தாவரங்கள் மற்றும் மரங்கள் காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன, ஏனெனில் அவை கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் போது ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன.

இதனால்தான் பிரேசிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செபாஸ்டியோ சல்காடோ மற்றும் அவரது மனைவி லெலியா டெலூயிஸ் வானிக் சல்காடோ தரிசு காடுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் 2 மில்லியன் மரங்களை நட்டு வளர்த்துவருகின்றனர்.

விருது பெற்ற புகைப்படவியளார் Sebastião Salgado வின் இந்த இலட்சியத்தை தனது மனைவியின் துணை கொண்டு நிறைவேற்றியுள்ளார்.

1994 இல் ருவாண்டாவில் நடந்த பிரபலமற்ற வெகுஜன படு கொலையை ஆவணப்படுத்திய பின் சல்காடோ உள, உடல் ரீதியாக பாதிக்கப்பட்டார். இதனால் தன் சொந்த ஊரானா பிரேசிலுக்கு திரும்பினார். ஆனால் அங்குள்ள குறிப்பிட்ட செழிப்பான மழைக்காடுகள்; உயிர்கள் அற்ற வெறும் தரிசு நிலமாக அளித்த காட்சி அவரை மேலும் ஆழமாக பாதித்தது.

கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்துபோயிருந்த சல்காடோவை அவரது மனைவி கொண்டுவந்த யோசனை மெல்ல தூக்கி நிமிர்த்தியது; அதுவே அவர்களது வாழ்க்கையை மாற்றியமைத்தது.  காடழிப்பைத் தீர்ப்பதற்கான மிகச் சிறந்த வழி மீண்டும் காடுகளை வளர்ப்பதே என்று அவரது மனைவி பரிந்துரைத்தார். அதனை துரிதமாக செயற்படுத்த முடிவெடுத்த சல்காடோ தம்பதியினர் சிறியதொரு ஒறுங்கமைப்பை உருவாக்கி அதன் மூலம் மரங்களை நடும் முயற்சியில் இறங்கினர். அவ் அமைப்பின் நோக்கமாக மில்லியன் மரங்களை அந்த தரிசு நிலங்களில் நட்டு மீண்டும் செழிப்பான காடுகளாக புதுப்பித்தலே ஆகும். அதற்கமைய தங்களின் ஆதரவாளர்களின் உதவியால் அப்பகுதியில் 4 மில்லியன் மரக்கன்றுகளை அவர்களால் நட முடிந்தது.

இந்த மரக்கன்றுகளில் 2.7 மில்லியன் மரங்களாக வளர்ந்தன. படிப்படியாக அனைத்து பூச்சிகளும் பறவைகளும், ஏனைய உயிரினங்களும் திரும்பின. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, வெப்பமண்டல காடு இறுதியாக அதன் முந்தைய மகிமைக்கு மாறியுள்ளது.

இந்த மாற்றம் என்னை மீண்டும் பிறப்பித்துள்ளது எனவும் இது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிடுகிறார் சல்காடோ .

சமீபத்திய அறிக்கையின் படி மீட்டெடுக்கப்பட்ட காட்டில் தற்போது 172 வகையான பறவைகள் வாழ்வதாகவும் 33 பாலூட்டி இனங்கள், 15 நீர்வீழ்ச்சி இனங்கள் மற்றும் 15 ஊர்வன இனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு முழு சுற்றுச்சூழலுக்கும் 2 மில்லியன் மரங்களை நடுவதற்கான முன்முயற்சி வெற்றிகரமாக புத்துயிர் அளித்த இந்த எழுச்சியூட்டும் கதை பல்வேறு மனங்களை நெகிழ வைத்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction