சந்தேகத்துக்கு இடமின்றி எமது மூளையே (மனித மூளையே) நம்மால் அறியப் பட்ட பிரபஞ்சத்தில் மிகவும் சிக்கலான பொருள் எனலாம்.
இது தொடர்பாக பிரபல வானியல் இயற்பியலாளரான மிக்கியோ காக்கு தனது 'மனதின் வருங்காலம்' என்ற பிரபல புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
'ஒரு ஒப்பீட்டுக்கு, 3 பவுண்ட்ஸ் எடையே உடைய எமது மண்டை ஓட்டுக்குள் பொருத்தப் படக் கூடிய மனித மூளையின் ஒரு சிறிய திசுவுக்கு ஈடாக ஒரு மிகப் பெரிய நகரத்தின் அளவுடைய கணணியானது தேவைப் படும் என்றால் அது ஆச்சரியமானது தான். இந்த சிறிய திசுப் பாகம் செயற்பட எமது உடல் வெப்பநிலை சில டிகிரிக்கள் மட்டும் உயர்வடையும் என்பதுடன் 20 வாட் சக்தியையே அது பயன்படுத்துகின்றது. இதற்குத் தேவையெல்லாம் சில பர்கர் உணவு மாத்திரமே ஆகும்..'
எமது மூளையில் எமது தன் உணர்வை (Consciousness) ஆக்கும் கிட்டத்தட்ட 100 000 000 000 நியூரோன்கள் உள்ளன. இவை தான் எமக்கு வருங்காலத்தை அறிவிப்பதுடன், நாம் கனவு காணவும், எமது உடலுறுப்புக்களைப் பராமரிக்கவும் உதவுகின்றன. காக்குவின் புத்தகத்தின் படி கடந்த 15 வருடங்களில் நாம் எமது மூளையைப் பற்றி, இதுவரை மனித வரலாற்றில் அறியப் பட்டதை விட மிக அதிகமாக அறிந்துள்ளோம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆனாலும் இந்த அதிசயமான உலகின் மிகவும் சிக்கலான பொருள் அல்லது உறுப்பு குறித்து நாம் தொடுத்துக் கொண்டு இருக்கும் கேள்விகளும் மிக மிக அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி, தகவல் : Quora
- 4தமிழ்மீடியாவுக்காக நவன்