நாட்டுத் தானியங்களில் மிக முக்கிய வகிபங்கை வகிக்கும் உழுந்தின் மருத்துவ குணங்கள் பல. அவற்றை இவ் வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.
குடும்ப பெயர்- Papilionaceae, Fabaceae
ஆங்கிலப் பெயர்- Black gram
சிங்கள பெயர்- Undhu
சமஸ்கிருத பெயர்- Masha
வேறு பெயர்கள்- உளுந்து, மாடம், மாஷம்
பயன்படும் பகுதி-
விதை, வேர்
சுவை- இனிப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- இனிப்பு
மருத்துவ செய்கைகள்-
Aphrodisiac - இன்பம் பெருக்கி
Demulcent- உள்ளழலாற்றி
Lactogogue- பாற்பெருக்கி
Nervine tonic- உரமாக்கி
Nutritive- உடலுரமாக்கி
Refrigerant- குளிர்ச்சியுண்டாக்கி தீரும் நோய்கள்-
வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரண பேதி, சிறுநீர் சம்பந்தமான வியாதிகள், மூலவியாதி, ஈரல் நோய், கருப்பை ரோகம்
பயன்படுத்தும் முறைகள்-
உழுந்தை மாவாக்கி பலகாரமாகச் செய்து சாப்பிட தாதுக்களுக்குப் பலமுண்டாகும்.
பச்சை உழுந்தை தேன் சேர்த்து சாப்பிடலாம்.
உழுந்தை நீரில் ஊறவைத்து எடுத்த நீரை மறுநாள் அதிகாலையில் அருந்த சிறுநீர் சம்பந்தமான நோய்கள் விலகும்.
உழுந்தை குடிநீரிட்டு சாப்பிட குன்ம நோய் குணமாகும்.
இதனால் செய்த பலகாரங்கள் பலவீன உடலினர்க்கு வலுவைக் கொடுக்கும்.
இதனால் செய்கின்ற எண்ணெயை வாதநோய், முடக்குநோய் போன்றவற்றிற்கு நோயுள்ள இடத்தில் பூசி வர குணமாகும்.
வேரை அரைத்துச் சூடாக்கி வீக்கங்களுக்குக் கட்ட அவை சுகமாகும்.
சாதாரண உழுந்தை வடையாகச் செய்தும் கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம்.
~சூர்யநிலா