free website hit counter

உணவு பாதுகாப்பு : அனைவரினதும் கடமை - உலக உணவு பாதுகாப்பு நாள்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 10 பேரில் 1 பேர் அசுத்தமான உணவை சாப்பிடுவதால் நோய்வாய்ப்படுகிறார்கள் என அறிவித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு முறைமைகளை ஒழுங்காக கையாளுவதன் மூலம் எமக்கான உணவு சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் பெற்றுக்கொள்ள இயலும். இது குறித்து உலக சுகாதார அமைப்பு எளிய ஐந்து வழிமுறைகளை தந்துள்ளது.


1. எப்போதும் தூய்மை

நாம் சமையலறைக்குள் நுழைவதற்கு முன்பு, கைகளை கழுவுவதும், சமைக்கும் போது எல்லா நேரங்களிலும் தூய்மையையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

2. பதப்படுத்தப்பட்ட மற்றும் சமைக்காத உணவுகளை பிரிப்பது

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சமைக்காத உணவுகளிலிருந்து வெவ்வேறு கொள்கலன்களில் வைப்பது நல்லது. இது இரண்டில் ஏதேனும் மாசுபடுவதற்கான அபாயத்தைத் தடுக்கும்.

3. நன்றாக சமைக்கவும்

எந்தவொரு கிருமிகளையும் கொல்லவும், ஊட்டச்சத்தை அதிகரிக்கவும், உணவு பரிமாறுவதற்கு முன்பு முழுமையாகவும் ஒழுங்காகவும் சமைக்கப்படல் வேண்டும்.

4. உணவு வகைகளுக்கு தகுந்த வெப்பநிலை

வேவ்வேறு வகையான உணவுகளுக்குத் தகுந்தாற்போல் வேவ்வேறு முறைகளில் அவைகளை சேமிக்க வேண்டும். (பாதுகாக்க வேண்டும்). உணவு சேமிப்பு இடம் மற்றும் வெப்பநிலை வாரியாகவும்; உணவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

5. சுத்தமான நீர் மற்றும் பாதுகாப்பான மூலப்பொருட்களைப் பயன்படுத்துங்கள்

சமையலின் போது பாதுகாப்பான மூலப்பொருட்களும், சுத்தமான பாத்திரங்கள் மற்றும் சுத்தமான நீரை எல்லா நேரங்களிலும் பயன்படுத்துங்கள்.

இந்த வழிமுறைகளை நாம் அடிக்கடி செய்வோர் ஆயினும் இந்த நோய் பேரிடர் காலத்தில் மீண்டும் கூடுதல் அவதானமாக உணவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அதனை உட்கொள்வோர் அனைவரினதும் கடமையாகும். மேலும் ஊரடங்கு காலத்தில் புதிதாக தங்களது திறமைகளை வெளிப்படுத்த சமையலைறைகளுக்குள் நுழைந்திருப்பவர்கள் உணவை பாதுகாக்கும் இந்த ஐந்து முக்கிய வழிமுறைகளை தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள், தெரிந்திருந்தால் வாழ்த்துக்கள். வாருங்கள் உணவை பாதுகாப்பாக உட்கொள்வோம்!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction