free website hit counter

கரும் பொருள் (Dark Matter) தொடர்பான முடிச்சுக்களை அவிழ்க்குமா நாசாவின் ரோமன் விண்கலம்?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரபஞ்சத்தில் அண்டங்கள் ஒன்றை விட்டு இன்னொன்று அதிகரிக்கும் வேகத்தில் விலகிச் சென்று கொண்டிருக்க அதாவது எமது பிரபஞ்சம் ஆர்முடுகும் (accelarating) விதத்தில் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருக்கக் காரணமான மர்மமான சக்தியை பிரஞ்சவியலாளர்கள் (Cosmonauts) கரும் சக்தி அல்லது இருண்ட சக்தி (Dark Energy) என்கின்றனர்.

மறுபுறம் அண்டங்களுக்கிடையே (Galaxies) பருப்பொருளை (Matter) ஈர்ப்பு விசைக்கு எதிராக இறுக்கமாக பிணைத்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத பொருளை இருண்ட பொருள் அல்லது கரும் பொருள் (Dark Matter) என அழைக்கின்றனர்.

இதில் மர்மமான விடயம் என்னவென்றால் இந்த கரும் சக்தி மற்றும் கரும் பொருள் ஆகிய இரண்டும் இணைந்து எமது கண்ணுக்குத் தெரியும் பிரபஞ்சத்தில் (Observable Universe) கிட்டத்தட்ட 96% வீதம் நிரப்புகின்றன. மனித அறிவுக்கு சற்றேனும் புலப்படும் மிச்சமுள்ள கண்ணுக்குத் தெரியும் ஒளி உட்பட ஏனைய சக்தி வடிவங்கள், மற்றும் பருப்பொருட்கள் வெறும் 4% வீதம் என்றால் ஆச்சரியம் தான். மேலும் அண்டங்களுக்கு இடையே விரவியிருக்கும் கரும் பொருள் அவற்றுக்குள்ளே எல்லா இடங்களிலும் சமச்சீராகப் பரவியிருப்பதையும் பிரபஞ்சவியலாளர்கள் அனுமானித்துள்ளனர். இதனால் தான் பால்வெளி அண்டத்தின் மையத்திலிருந்து ஒரு நட்சத்திரம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அது மற்றைய நட்சத்திரங்களுடன் சேர்ந்து சீரான வேகத்திலேயே அண்டத்தின் மையமான Saggitarius A என்ற அதிநிறை கருந்துளையை (Supermassive Blackhole) சுற்றி வருகின்றது. இதுவே சூரிய குடும்பத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் சூரியனில் இருந்து தூரம் செல்ல செல்ல கோள்கள் அதனை சுற்றி வரும் வேகம் பொதுவாகக் குறைவடைவதை அனுமானிக்கலாம்.

முன்னதாக WFIRST என அழைக்கப் பட்ட அதிதிறன் வாய்ந்த அகச்சிவப்புக் கதிர் (Infrared ray) தொலைக் காட்டியான ரோமன் ஆனது 2020 ஆமாண்டே ஏவப்பட இருந்தது. ஹபிள் தொலைக் காட்டியை விட 100 மடங்கு அதிக பார்வைத் திறன் கொண்ட ரோமன் தொலைக் காட்டி பிரபஞ்சத்திலுள்ள மிகப் பெரிய கட்டமைப்புக்களில் கரும்பொருள் மற்றும் கரும் சக்தியின் விநியோகம் மற்றும் வளர்ச்சியை அவதானிப்பதன் மூலம் அவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவுள்ளது. மேலும் Exoplantes எனப்படும் பூமியைப் போன்ற கிரகங்கள் குறித்த ஆய்வையும், அகச்சிவப்புக் கதிர் பௌதிகவியலுக்குப் பெரும் பங்களிப்பையும் வழங்கவுள்ளது.

நட்சத்திரங்களை வகைப் படுத்தும் கல்வியில் தேர்ச்சி பெற்றவரும் நாசாவின் முதல் அமெரிக்க பெண் நிர்வாகியுமான நான்சி கிரேஸ் ரோமன் என்பவரின் பெயரால் அழைக்கப் படும் இந்த ரோமன் தொலைக் காட்டி தற்போது மே மாதம் 2027 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட திட்டமிடப் பட்டுள்ளது. விண்ணில் பால்வெளி அண்டம் மற்றும் அண்டிரோமிடா அண்டம் ஆகிய பேரடைகளை (Main clustes) அண்மித்திருக்கும் சிறிய அண்டங்களில் (Globular clusters) கரும் துளைகள் காரணமாக தனித்துப் பயணிக்கும் நட்சத்திரங்களது வளையும் போக்குகளை அவதானிப்பதன் மூலம் கரும் பொருள் அவற்றில் தொழிற்படும் விதத்தை ரோமன் விண்கலம் அடையாளம் காணவுள்ளது.

இதேவேளை நாசாவின் Fermi Gamma ray விண்தொலைக் காட்டி அல்லது GRB சமீபத்தில் மிகவும் வீரியமான காமாக் கதிர் வீச்சை இனம் கண்டுள்ளது. 2022 நவம்பரில் இந்த GRB காமா விண் தொலைக் காட்டி மிகவும் பிரகாசமான காமாக் கதிர் வீச்சைப் பதிவு செய்ததுடன் அது மின்னல் வேகத்தில் மறைந்து விட்டதால் அதற்கு BOAT என்று பெயரிட்டும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் காமாக் கதிர் வீச்சுக்களை இனம் காண்பது மிக அரிதான நிகழ்வுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் - SciTechDaily

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction