free website hit counter

கால இயந்திரம் என ஹாவ்கிங் அழைக்கும் தன் முதல் துகள் மோதுகைக் கருவியை உருவாக்குகின்றது அமெரிக்கா!

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

20 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞரான ஸ்டீபன் ஹாவ்கிங் இனால் கால இயந்திரம் (Time Machine)என்று அழைக்கப் பட்ட துகள் ஆராய்ச்சிக் கருவிகளில் தனது முதலாவது துணை அணுத் துணிக்கைகள் (துகள்) மோதுகைக் கருவியை (Particle Collider) அமெரிக்கா லோங் ஐலன்ட் பகுதியில் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் அமைத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த துகள் மோதுகைக் கருவி பிரபஞ்சத்தில் சடத்தினை இறுக்கிப் பிடித்திருக்கும் விசைகள் பற்றி ஆராயவுள்ளது. EIC(Electron-Ion Collider)
என்றழைக்கப் படும் இக்கருவி துகள் ஆர்முடுக்கும் கருவி வகையைச் (Particle accelerator)சேர்ந்தது. நியூயோர்க்கின் Long Island பகுதியில் உள்ள புரூக்காவேன் தேசிய ஆய்வகத்தில் இது கட்டமைக்கப் பட்டு வருகின்றது. ஒளியின் வேகத்துக்கு சமீபமாக புரோட்டன்களையும், எலெக்ட்ரோன்களையும் மோதவிட்டு ஆய்வு செய்யக் கூடிய இந்தப் புதிய நிலக்கீழ் EIC வளையமும், CERN போன்று ஆய்வில் இருந்து வரும் துகள் மோதுகைக் கருவிகளுக்கு இணையாகப் பிரபஞ்சத்தின் தோற்றம், மற்றும் அணுக்களின் கட்டமைப்புப் பற்றிய ஆய்வுகளுக்குப் பெருமளவில் உதவவுள்ளது.

இந்த துகள் மோதுகை வளையத்தில் துணை அணுத் துணிக்கைகள் (Subatomic particles) மோதும் போது அவை ஒரு சூடான சூப் இற்கு இணையான பிளாஸ்மாவாக உருகி பிரபஞ்சம் தோன்றக் காரணமான் பிக்பேங் என்ற பெரு வெடிப்புக்குப் பின் துணை அணுத் துணிக்கைகள் எந்த மாதிரியான தன்மையில் இருந்தனவோ அதே தன்மையை உருவாக்கும். இதனால் தான் ஸ்டீபன் ஹாவ்கிங் துகள் மோதுகைக் கருவிகளை கால இயந்திரங்கள் என்று ஒப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புரூக்காவேன் தேசிய ஆய்வகத்தில் தற்போது ஏற்கனவே பணியில் இருக்கும் RHIC என்ற கருவியை ஈடு செயூம் விதத்தில் தான் EIC நிறுவப் படவுள்ளது. 2024 ஆமாண்டு நிரந்தரமாக முன்னைய RHIC கருவி மூடப் படுகின்றது. 2030 அளவில் பாவனைக்கு வரக்கூடிய EIC இன் செலவு $1.6 தொடக்கம் $2.6 பில்லியன் டாலர்களுக்குள் இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula