free website hit counter

7 பில்லியன் வருடம் பழமையான பதார்த்தம் பூமியில் உள்ள விண்கல் சிதைவில் கண்டுபிடிப்பு!

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

50 வருடங்களுக்கு முன்பு பூமிக்குள் நுழைந்த விண்கல் ஒன்று அவுஸ்திரேலியாவில் மோதியது.

இந்த விண்கல் மோதிய பகுதியில் அண்மையில் நடத்தப் பட்ட ஆய்வில் குறித்த விண்கல்லில் இருந்து மிக மிக அரிதான ஒரு மாதிரி கண்டுபிடிக்கப் பட்டு பரிசோதிக்கப் பட்டது. இதன்போது இந்த மாதிரியில் உள்ள நட்சத்திர தூசு (Stardust) ஆனது 5 முதல் 7 பில்லியன் வருடங்கள் பழமையானது என்று கணிக்கப் பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது எமது பூமியில் கண்டு பிடிக்கப் பட்ட மிகப் பழமையான பதார்த்தம் இதுதான் என்றும் விஞ்ஞானிகள் தீர்மானமாகத் தெரிவிக்கின்றனர். விண்வெளி ஆய்வில் இந்த நட்சத்திரத் தூசு மிகவும் பயனுள்ள தகவலை அளிக்கக் கூடியது. ஏனென்றால் எமது சூரியனே 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு தான் அண்டங்களுக்கு உள்ளே இருக்கும் தூசு முகில்களில் இருந்து தோன்றியது. எனவே தற்போது எமது பூமியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ள இந்த நட்சத்திர தூசு சூரியனுக்கும், அதில் அங்கம் வகிக்கும் பூமி உட்பட சூரிய குடும்பத்துக்குமே மிகவும் பழமையானது ஆகும்.

அண்டங்களில் எந்தவொரு நட்சத்திரமும் அதில் இருக்கும் வாயுப் படலம், தூசு மற்றும் வெப்பத்தின் சரியான கலவையில் இருந்தே தோன்றுகின்றன. இந்த ஒவ்வொரு நட்சத்திரமுமே ஒரு சூரியனாகும். இவை மில்லியன் முதல் பில்லியன் ஆண்டுகளுக்கு அதில் அடங்கி இருக்கும் சடம் மற்றும் கருத்தாக்கம் அடிப்படையில் ஒளி வீசக் கூடியவை ஆகும்.

இந்நிலையில் இந்த நட்சத்திரங்களின் தோற்றத்தில் பங்கு பெறாது ஆனால் அவை உருவான பின்னர் ஈர்ப்பு விசையால் அவற்றின் சுற்று வட்டப் பாதைக்குள் வரக்கூடிய மிகப் பழமையான விண்கற்கல் அல்லது வால்வெள்ளிகளில் இருந்து கிடைக்கப் பெறக் கூடிய இந்தத் தூசு மாதிரிகள் ஆங்கிலத்தில் presolar grains என்று அழைக்கப் படுகின்றன. தற்போது ஆய்வு செய்யப் பட்ட மாதிரி அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வந்து மோதிய முர்கிசன் என்று பெயரிடப் பட்ட விண்கல்லில் இருந்து பெறப்பட்டது ஆகும்.

இந்த மாதிரியில் மைக்ரோஸ்கோப் மூலம் அவதானிக்கப் பட்டு அடையாளம் காணப்பட்ட சிலிக்கன் கார்பைட் என்ற கணியம் ஒரு நட்சத்திரம் குளிர்வடையும் போது உருவாகும் முதல் பதார்த்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction