free website hit counter

மனித இனம் பேரழிவு நிலையை இதற்கு முன்பு நெருங்கித் தப்பியதுண்டா?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விஞ்ஞான புவியியல் வரலாற்றில் இவ்வாறு 3 தடவை நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதில் முதல் 2 தடவைகளுமே பூமியில் சூப்பர் வல்கனோ எனப்படும் வீரியம் மிக்க எரிமலைச் செயற்பாடுகளின் போது தான் நிகழ்ந்துள்ளது. முதலாவது நிகழ்வு 72 000 வருடங்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் ஜாவாத் தீவிலுள்ள டோபா என்ற சூப்பர் எரிமலை வெடித்த போது ஏற்பட்டது.

2 ஆவது எரிமலை வெடிப்பு 39 000 வருடங்களுக்கு முன்பு இன்று இத்தாலியின் நேப்பிள்ஸ் நகர் இருக்கும் இடத்தில் நேர்ந்தது. இதன் போது ஏற்பட்ட மனித இன அழிவு குறித்த தகவல்கள் மனித மரபணுவில் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து கணிக்கப் பட்டவை ஆகும். நேப்பிளஸ் எரிமலை வெடிப்பே ஐரோப்பாவில் மனித இனத்துக்கு மிகப் பெரும் அழிவை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தமாகும். இதன் போது மனித இனத்தின் மூதாதையரான நியாண்டர்தால்ஸ் மற்றும் அவர்களின் கலாச்சாரம் முற்றிலும் அழிந்தது.

ஆனாலும் 72 000 ஆண்டுகளுக்கு முன் வெடித்த டோபா எரிமலை தான் மிகத் தீவிரமானதும் பெரிதானதும் ஆகும். இதன் போது பண்டைய மனித இனத்தின் மூதாதையர்களான H.neanderthalensis,H. sapiens, H.denisova ஆகிய இனங்களின் மக்கள் தொகை 1000 இற்கும் 10 000 இற்கும் இடைப் பட்டதாகத் தான் இருந்ததாம்.

3 ஆவது நிகழ்வு அரசியல் காரணங்களுக்காக கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மூளவிருந்த அணுவாயுத ஏவுகணைப் போர் 1962 தவிர்க்கப் பட்டது என்பது கூறப்படுகின்றது. இதன் போது பூமியில் அணுவாயுதப் போர் காரணமாக ஏற்படவிருந்த மனித இன அழிவானது அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி மற்றும் ரஷ்ய அதிபர் க்ருஷோச்சேவ் ஆகிய இருவர் கையில் தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction