free website hit counter

2033 ஆமாண்டு செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லத் தயாராகி வரும் 18 வயதே ஆன பெண்!

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெறும் 18 வயதே ஆகும் அமெரிக்காவைச் சேர்ந்த அலைஸ்ஸா கார்சென் என்ற இளம் பெண் 2033 ஆமாண்டு செவ்வாய்க் கிரகத்தில் கால் பதிப்பதற்கான விண்வெளி வீரர் பயிற்சியினை ஏற்கனவே ஆரம்பித்துள்ளார்.

உயர்தர விண்வெளி அகாடமியில் (Advanced Space Academy) இல் பட்டப் படிப்பை நிறைவு செய்த மிக இளம் வயதுப் பெண் இவராவார்.

மேலும் நாசாவின் அனைத்து விண்வெளி பாசறைப் பயிற்சிகளையும் (Space Camp) நிறைவு செய்த ஒரே நபரும் இவராவார். இவர் ஒரு புகழ் பெற்ற விண்வெளி ஆர்வலராகவும் வளர்ந்து வருகின்றார். விண்வெளிப் பயணங்கள் பற்றிய இளம் சிறுவர்களுக்கான அனிமேஷன் டிவி தொலைக் காட்சித் தொடரான The Backyardigans இனைப் பார்த்து 3 வயதுக்குள் இவருக்கு விண்வெளி ஆர்வம் துளிர் விட்டுள்ளது. இவர் தனது 3 ஆவது வயதில் தன் தந்தையிடம் தான் ஒரு விண்வெளி வீராங்கணை (Astronaut) ஆக வர வேண்டும் என்றும் செவ்வாய்க் கிரகத்துக்குச் (Mars) செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகின் சில முக்கிய இடங்களில் நடக்கும் நாசாவின் அனைத்து முக்கியமான 7 விண்வெளிப் பாசறைகளிலும் பயின்று முடித்த ஒரே நபராகப் பின்னர் இவர் முன்னேற இந்த ஆர்வமே காரணமாகியுள்ளது. தனது 18 வயதில் இவர் பைலட் லைசென்ஸ் இனையும் சுவீகரித்துள்ளார். இவருக்கு அளிக்கப் பட்ட பயிற்சிகளில், தண்ணீரில் உயிர் வாழுதல், g force பயிற்சி, நுண் ஈர்ப்பு விமானப் பயிற்சி (micro gravity flights), Scuba certification, காற்றழுத்தங்களை எதிர் கொள்ளும் பயிற்சி போன்றவை முக்கியமானவை ஆகும்.

2019 முதல் புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக் கழகத்தில் இவர் வான் உயிரியல் கல்வியைக் கற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தகது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction