free website hit counter

நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தில் அமெரிக்கா! : அச்சம் தெரிவிக்கும் சீனா

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதல் விண்வெளியில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்ட வல்லரசு நாடுகள் முயன்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக அமெரிக்கா 2026 ஆமாண்டுக்குள் நிலவில் தனது முதல் அணு உலையை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதை சாத்தியமாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக SPD எனப்படும் புதிய விண்வெளி கொள்கை ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். இந்த செயற்திட்டத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை 2020 இறுதி முதல் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா அமெரிக்க சக்தி திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளது. அமெரிக்காவின் வருங்கால விண்வெளி இலக்குகளை நிர்ணயிக்கும் SPD-6 என்ற புதிய திட்டத்துடன் SNPP எனப்படும் விண்வெளி அணுசக்தி மற்றும் உந்துவிசை (Propulsion) தேசிய செயற்திட்டத்தை அமெரிக்கா நடைமுறப்படுத்தவுள்ளது.

இதன் மூலம் நிலவிலும், செவ்வாய்க் கிரகத்திலும் அமெரிக்காவின் தனிப்பட்ட முற்றுகை அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிய அதிபர் ஜோ பைடென் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் பொறுப்பை ஏற்றாலும், இந்தத் திட்டங்களில் மாற்றம் ஏற்படாது என்றும் எதிர்ப்பார்க்கப் படுகின்றது. 2024 ஆமாண்டு நிலவுக்கு முதலாவது பெண்மணியையும், அடுத்த விண்வெளி வீரரையும் அமெரிக்கா செலுத்த திட்டமிட்டுள்ளது.

நிலவில் அமெரிக்காவின் அணுசக்தி திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ள சீனா, சந்திரனை அணுவாயுதங்கள் உற்பத்தி செய்யும் இடமாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் சாடியுள்ளது. சந்திரனில் இருக்கும் ஹூலியம் 3 வகை மூலக்கூறை அணுசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்தவுள்ள அமெரிக்கா விண்வெளி வல்லரசாக முன்னேறும் அபிலாஷையைக் கொண்டிருப்பதாகவும் சீனா கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction