free website hit counter

ஆய்வுகூடத்தில் எம்மால் உருவாக்க முடியவில்லை எனில் இயற்கையில் தானாக உயிரி எவ்வாறு தோன்றியது?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு ஆய்வு கூடத்தில் விஞ்ஞானிகளால் இதுவரை வெற்றிகரமாக ஒரு உயிரினத்தை உருவாக்க முடியவில்லை எனில் அது இயற்கையில் தானாக சந்தர்ப்ப வசத்தால் தோன்றியதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என்பது அறிவு பூர்வமான கேள்வியாக இருக்கலாம்.

ஆனால் இது சற்று முட்டாள் தனமானது. ஏனென்று பார்ப்போம்.

உதாரணமாக ஆய்வு கூடத்தில் சூரியனில் உள்ளே நிகழும் கருத்தாக்கத்துக்கு இணையான ஒன்றை இதுவரை விஞ்ஞானிகளால் உருவாக்க முடியவில்லை எனில் சூரியன் அணுக் கருச் செயற்பாடு காரணமாக அது சக்தியூட்டப் படுகின்றது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என்ற கேள்வியும் இது போன்றதே தான். ஆனால் சூரியன் எம் கண் முன்னே பூமியை ஒளியூட்டுவதையும், வெப்பத்தை வாரி வழங்குவதையும் பூமியில் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பதையும் நாம் நன்கறிவோம்.

உண்மை என்னவெனில் இயற்கையில் நிகழும் நிகழ்வுகளை பௌதிக ரீதியாக விளக்க சில தசாப்தங்களாகத் தான் நாம் முயன்று வருகின்றோம். ஆனால் எம் கண் முன்னே இருக்கும் பிரபஞ்சத்தின் படைப்பும், அதில் நிகழ்ந்து வரும் உயிரினப் பரிணாமமும் கிட்டத்தட்ட பில்லியன் பின்பு மில்லியன் வருடங்களுக்கு முன் தொடங்கி இயங்கி வருபவை ஆகும். இயற்கைக்கு இந்த செயற்பாட்டுக்காக எந்தவொரு ஆய்வு கூடமும் தேவைப் படவில்லை. ஆனால் இதைப் புரிந்து கொள்ளத் தான் மனித இனத்துக்கு ஆய்வு கூடம் தேவைப் படுகின்றது என்பதே யதார்த்தமாகும்.

இப்போது புரிந்திருக்கும் இக்கட்டுரைத் தலைப்பில் உள்ள கேள்வி எவ்வளவு முட்டாள் தனமானது என. சற்று சிந்திப்போம்..!

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction